×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹீரோவா? வில்லனா? விஜய்சேதுபதியின் புதிய ரூட்டுக்கான திட்டம்..! பிரபல ஹிட் இயக்குனருடன் கைகோர்ப்பு..! 

ஹீரோவா? வில்லனா? விஜய்சேதுபதி புதிய ரூட்டுக்கான திட்டம்..! பிரபல ஹிட் இயக்குனருடன் கைகோர்ப்பு..! 

Advertisement

நடிகர் விஜய்சேதுபதி அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோலிவுட் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் விஜய்சேதுபதி. இவர் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அதற்கு உதாரணமாக, விக்ரம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இவர் முன்பெல்லாம் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றார். ஆனால், இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் தான் இவருக்கு மிகப்பெரும் புகழாரம் சூட்டியுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். 

இந்த நிலையில், தான் வில்லனாக நடிப்பதை சற்று குறைத்து நல்ல அருமையான கமர்சியல் படத்தை மக்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தீரன், வலிமை, ஏகே 61 மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே எச்.வினோத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவிவந்த நிலையில், தற்போது இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இயக்குனர், விஜய் சேதுபதியிடம் ஒரு கதையை கூறிய நிலையில், அது அவருக்கு மிகவும் பிடித்ததாக தெரிகிறது. 

மேலும் அஜித் படத்தை முடித்த பிறகு, வினோத் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவார் என்று தெரியவருகிறது. ஆனால் தல அஜித் போன்ற முக்கிய பிரபலங்களை வைத்து படம் எடுக்கும் எச்.வினோத் சூர்யா, விஜய் என்று செல்லாமல் விஜய்சேதுபதிக்கு படம் இயக்குவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathi #Kollywood #cinema #director #movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story