செம்ம மாஸ்! விஜயும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இந்த பிரமாண்ட இடத்தில் நடிக்கவுள்ளார்களா! எந்த இடம் தெரியுமா?
Vijay sethupathi vijay

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் தான் பிகில். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது டெல்லியில் சூட்டிங் முடிவடைந்துள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் பாதி முடிவடைந்துள்ளதாம்.
அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள காட்சி படமாக்கப்பட உள்ளது. இக்காட்சியானது மிக பிரமாண்டமாக பெங்களூரில் மிகப்பெரிய சேட் அமைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.