தயவுசெஞ்சு இதை நம்பாதீங்க! அந்த கும்பலிடமிருந்து தள்ளியே இருங்க! விஜய் சேதுபதி அதிரடி பேச்சு!
Vijay sethupathi speech in master audio launch

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. துணை நடிகரான அவர் அவர் குறுகிய காலத்தில் தனது முயற்சியால் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் ஹீரோவாக மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாகவும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்து பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் வ வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய விஜய் சேதுபதி, நான் இங்கு 2 விஷயங்கள் பற்றி பேச விரும்புகிறேன். ஒன்று கொரோனா. அதற்கு யாரும் பயப்படவேண்டாம். இது இயல்பு. எதாவது ஒன்று இதுபோல வந்துகிட்டேதான் இருக்கும். நாம்தான் நமது மனதை பலப்படுத்தி கொள்ளவேண்டும்.
இரண்டாவது, இன்னொரு வைரஸ் சாமிக்காக சண்டை போட்டுக்கிறவங்க. சாமி என்பது பல கோடி வருடமாக இங்கு உள்ளது. அதனை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. கடவுள் மேல இருக்கான். மனிதன் தான் இங்கே வாழ்கிறான். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும். மேல இருந்து எதுவும் வராது. மதத்தின் பெயரை சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள். மதம் அவசியம் இல்லாதது தயவு செய்து நம்பாதீங்க. மதம், சாதி என்னும் கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க என்று கூறியுள்ளார்.