×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என மாஸ் காட்டி முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை வி கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தாடி மீசையுடன் மிரட்டலாக இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படத்துடன் ரயில் தடங்கள் தெரிவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி தற்போது விடுதலை 2 மற்றும் மகாராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathi #Miskin #train
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story