சீரியலில் நடித்துள்ள விஜய்சேதுபதி...அதுவும் பிரபல நடிகருடன் இணைந்து நடித்துள்ளார் பாருங்க! வைரலாகும் வீடியோ...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் Ace படம் ரிலீசுக்கு முன்னதாக, அவர் நடித்த சீரியல் காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு
விஜய் சேதுபதி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குகிறார். இவர் நடித்த மஹாராஜா திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக விடுதலை 2 திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Ace படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அடுத்து, வரும் 23ம் தேதி விஜய் சேதுபதி நடித்திருக்கும் Ace திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த சீரியல் வீடியோ வைரல்
திரையுலக நட்சத்திரங்களின் பழைய வீடியோ காட்சிகள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், விஜய் சேதுபதி நடித்திருந்த ஒரு சீரியல் காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோவில், நடிகர் கெத்து தினேஷுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.