×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதி... அப்போ படம் செம மாஸ் தான்.

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதி... அப்போ படம் செம மாஸ் தான்.

Advertisement

தமிழ் சினிமாவில் தென் மேற்கு பருவ காற்று என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. அதனையடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருந்து வருகிறார்.  இவர் குறுகிய காலத்திலேயே தனது தீராத முயற்சியால் உச்சநிலைக்கு சென்றார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மும்பைக்கார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன் மற்றும் கடைசி விவசாயி போன்ற படங்கள்  ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் தயாராகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி பிரபல முன்னணி நடிகரான கார்த்தி படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். 

இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தாமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijay sethu pathi #Karthi #Villan role
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story