×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர்.. வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கேரக்டர் இதுதானா.! அட.. அவரோட பேரு என்ன பார்த்தீங்களா!!

சூப்பர்.. வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கேரக்டர் இதுதானா.! அட.. அவரோட பேரு என்ன பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66 வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எமோஷனல் செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது. இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் விஜய் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vaarisu #Role #vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story