டிவிட்டர், டிக் டாக் என மாஸ் காட்டும் தளபதி விஜய்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
Vijay name used maximum in tik tok app
தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் தளபதி விஜய். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமா முழுவதும் இவருக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
AR முருகதாஸ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வந்தாலும், வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து மாபெரும் வெற்றிபெற்றது.
தற்போது இயக்குனர் அட்லீயுடன் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறர் விஜய்.
இந்த நிலையில் இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்-களில் ஒன்றான டிக் டாக்கில் நடிகர் விஜய் என்ற ஹேஸ்டேக்கை இதுவரை 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். இது செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு டிவிட்டர் ட்ரெண்டிங்கில் அதிகம் இருந்த படத்தின் பெயர் சர்க்கார் என்றும், ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நடிகர்களின் பெயரில் விஜய் 8 வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.