×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் விஜய் பற்றி வரும் கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம்! வெளியானது அதிரடி அறிவிப்பு!

Vijay makal iyakam released letter

Advertisement

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய். பொதுவாகா விஜய் படம் வெளியாகப்போகிறது என்றாலே ஏதாவது சர்ச்சை நிச்சயம் வெடிக்கும். மேலும் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது சினிமாவையும் தாண்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் விஜய் பற்றி மேலும் ஒரு சர்ச்சை எழுத்துள்ளது. நடிகர் விஜயின் மேலாளரும், புலி பட தயாரிப்பாளருமான PT செல்வகுமார் விவாத நிகழ்ச்சியில் பேசும் போது “விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்” என்று பேசினார். இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்’நமது  தளபதி விஜய் அவர்களின் முன்னாள்  மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர், ￰வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன்  இல்லை என்பதை தங்களின்  மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !

இருப்பினும், தளபதி விஜய் அவர்கள்  பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின்  கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதோடு, நமது தளபதி விஜய்  அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய்  அவர்கள்  அதிகாரம் அளிக்கவில்லை  என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே,  தளபதி விஜய் குறித்த   தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று  கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை  யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம்  கேட்டுக்கொள்கிறேன்.”

ஆகவே,  விஜய் குறித்த  தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று  கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை  யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Vijay makkal iyakam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story