×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'தளபதி 68' படத்தின் டைட்டில் புரோமோ எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்.!

'தளபதி 68' படத்தின் டைட்டில் புரோமோ எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் லியோ படத்திற்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், சினேகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தளபதி 68 திரைப்படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. அதன்படி 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. 

மேலும், இந்த படத்துக்காக இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யிடம் நான்கு டைட்டில்களை கொடுத்ததாகவும், அதில் ஒரு டைட்டிலை விஜய் செலக்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை வரும் 2024 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalapathi 68 #vijay #venkat prabhu #yuvan shankar raja #Ags
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story