தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜயை கண்டு நடுநடுங்கிறதா திமுக?.. ட்விட்டரில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்..! காரணம் என்ன?.!

விஜயை கண்டு நடுநடுங்கிறதா திமுக?.. ட்விட்டரில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்..! காரணம் என்ன?.!

Vijay Fans twitter Trend about DMK Fears Thalapathy VIJAY Advertisement

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் லியோ.

இப்படம் அக்.19ம் தேதி திரையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிரூத் ரவிச்சந்தர் படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். 

படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. சர்வதேச அளவிலும் லியோ திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் திரைப்படங்களை வெளியிட தேவையான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் படத்தின் வெளியீடுக்கு முட்டுக்கட்டை இருப்பதாக தெரியவருகிறது. 

vijay fans

லியோ படத்தை வருமானம் அதிகம் வரும் சென்னை, வடக்கு ஆற்காடு, தெற்கு ஆற்காடு மற்றும் மத்திய மாவட்டங்களில் வெளியிடும் உரிமையை அரசுக்கு தொடர்புடைய, அமைச்சர் ஒருவரின் கைகளில் முன்பு இருந்த முன்னணி நிறுவனம் கேட்பதாக கூறப்படுகிறது. 

இதற்கு விருப்பம் இல்லாத விஜய் மறுப்பு தெரிவித்ததால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அத்தரப்பு நடத்த அரசு ரீதியில் காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அம்முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல, வரும் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தக்க பாடம் புகட்டப்படும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். 

விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாக அஜித், ரஜினி உட்பட பல நடிகர்களின் ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay fans #thalapathy vijay #cinema news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story