தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'தளபதி 68' படத்தில் இரட்டை வேடத்தில் விஜய்? வெளியான தகவல்.!

'தளபதி 68' படத்தில் இரட்டை வேடத்தில் விஜய்? வெளியான தகவல்.!

Vijay double action in thalapathi 68 movie Advertisement

தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

vijay

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Thalapathi 68 #venkat prabhu #Leo #Double action
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story