×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாஸ்டர் பட ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு எனது ரசிகர்கள் யாரும் வரவேண்டாம்! அதிரடியான கண்டிஷனை போட்ட தளபதி விஜய்!

Vijay

Advertisement

மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். 

மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு 
வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைப்பெறவுள்ளது.

ஆனால் அந்த விழாவிற்கு தனது ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விழாவில் தன்னை சந்திக்க நினைக்கும் ரசிகர்களை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதை தன்னால் பார்க்க முடியவில்லை எனவே தான் இவ்வாறு கூறியுள்ளார் நடிகர் விஜய். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#master #vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story