தளபதி64 படத்தில் இணைந்த முக்கிய பிரபலத்தின் மகன் - நெகிழ்சில் பகிர்ந்த ட்விட்டர் பதிவு.
Vijay 64 shanthanu

அட்லியின் இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்ததாக மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி#64 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைககளின் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாப்பத்திரத்தில் நடிகை மாளவிகா மோகன் நடிப்பதாக படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மாளவிகா மோகன் ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையால நடிகர் ஆன்டனி வர்கீஸ் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான பாக்கியராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனு நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.தீவிர விஜய் ரசிகரான இவர் தற்போது அவருடன் நடிப்பது பற்றி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பேசியுள்ளார்.