×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழ்நாட்டுக்கே பெருமை.. 5 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு., ஜெயித்த வெற்றிமாறன்.! விடுதலை கொண்டாட்டம்.!

தமிழ்நாட்டுக்கே பெருமை.. 5 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு., ஜெயித்த வெற்றிமாறன்.! விடுதலை கொண்டாட்டம்.!

Advertisement

 

மார்ச் 31, 2023 அன்று திரையரங்குகளில் வெற்றிமாறன் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வெளியான படம் விடுதலை பாகம் 1. இப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும். 

படத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன், இளவரசு உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

படத்தின் இசையமைப்பு பணிகளை இளையராஜாவும், ஒளிப்பதிவு பணிகளை வேல்ராஜும் மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில், படம் ரோட்டர்டாம் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அப்போது, விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் விருது குழு மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து மெய் சிலிர்த்துப்போன பலரும், எழுந்து நின்று கிட்டதட்ட 5 நிமிடங்கள் கைதட்டி தங்களின் வாழ்த்துக்கள் பதிவு செய்தனர். 

இந்த வெற்றி பாராட்டுகளுக்கு பின் சர்வதேச அளவிலான விருது கிடைக்கும் வாய்ப்பு விடுதலை படத்திற்கு அதிகரித்து இருப்பதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viduthalai Movie #vetrimaran #Soori Muthusamy #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story