×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"சமத்துவத்திற்கு எதிரானவர்களை எதிர்த்து நிற்பேன்" ஓபனாக பேசிய வெற்றிமாறன்..

சமத்துவத்திற்கு எதிரானவர்களை எதிர்த்து நிற்பேன் ஓபனாக பேசிய வெற்றிமாறன்..

Advertisement

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடியெடுத்து வைத்தார்.

முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனரானார். இப்படத்திற்கு பின்பு 'ஆடுகளம்' திரைப்படத்தை இயக்கி தேசிய விருதை வென்றார். மேலும் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன், விசாரணை, வடசென்னை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். 'விடுதலை' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இந்நிலையில் வெற்றிமாறன் தனது அரசியல் நிலைப்பாடுகளை ஓபனாக பேசி வருகிறார். இதன்படி தற்போது "சமத்துவம் தான் எனது நிலைப்பாடு. சமத்துவத்திற்கு எதிராக இருப்பவர்களை எப்போதும் எதிர்த்து நிற்பேன்" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maran #director #Political #News #cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story