×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'லியோ' வைப்புடன் தொடங்கும் தளபதி 68 திரைப்படம்.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்.!

'லியோ' வைப்புடன் தொடங்கும் தளபதி 68 திரைப்படம்.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்ற நிலையில் தற்போது சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று லியோ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு தீயாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரீடுவிட் செய்த தளபதி 68 திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இதே லியோ வைப்புடன் நாம் ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது இது குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தளபதி 68 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Thalapathi 68 #venkat prabhu #Leo #Ags
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story