×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீயாய் பரவும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!

தீயாய் பரவும் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிம்பு இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் சிம்பு இயக்குனர் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்துள்ளார். சிம்புவின் 47-வது படமான இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தில் சிம்பு கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு மற்றும் இயக்குநர் கௌதம் மேனனுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #Radhika #shooting
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story