×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. செம ஜாக்பாட்தான்! ஜோடிகளாக மாறும் பிக்பாஸ் சீசன் 5 பிரபலங்கள்! சர்ப்ரைசில் ரசிகர்கள்!!

வாவ்.. செம ஜாக்பாட்தான்! ஜோடிகளாக மாறும் பிக்பாஸ் நட்சத்திரங்கள்! சர்ப்ரைசில் ரசிகர்கள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மிகவும் தீவிரமாக டாஸ்க்குகளை செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. வருண் நடிகர் ஆவார். அவர் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் குடும்பத்தை சேர்ந்தவர். வருண் தற்போது ஜோஷ்வா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் டிரெய்லர் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

மேலும் அக்ஷரா மாடலிங் துறையை சேர்ந்தவர். பிக்பாஸ் வீட்டில் சிறந்த நண்பர்களாக இருந்துவந்த வருண், அக்ஷரா இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒன்றாக எலிமினேட் ஆனர். அதன் பின்னரும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் ஒன்றாக படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Varun #Akshara #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story