×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை வரலட்சுமி இப்படியெல்லாம் செய்வாரா! வைரலாகும் விடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

varalakshmi stunt scene for chasing movie

Advertisement

தமிழில் தனது தில்லான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த வரலட்சுமி சரத்குமார், கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன்  த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இத்திரைப்படம் வீரகுமார் இயக்கத்தில், தஷி இசையில், மைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது. மலேசியாவில் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ள இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.  இந்த போஸ்டரில் வரலட்சுமி சரத்குமார், இரு சக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சி இடம்பிடித்துள்ளது.

இதிலிருந்தே இந்த படத்தில் வரலட்சுமி ஒரு கம்பீரமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. அதிலும் அவரது தோரணையை பார்க்கும் போது ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்ற யூகமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சண்டை காட்சி படப்பிடிப்பில் வரலட்சுமி செய்த ஸ்டண்ட் காட்சியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சண்டை காட்சியை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் சொல்லி கொடுக்கிறார்.

இந்த சண்டை காட்சியில் ஆண்களுக்கு இணையாக மற்றொரு ஆணை சுழற்றி கீழே சாய்கிறார் வரலட்சுமி. அவரது இந்த முயற்சி அனைவரையும் ஆச்சர்ய படவைத்துள்ளது. சேஸிங் படத்திற்காக தானே சண்டை காட்சியில் இறங்கி நடிக்கும் வரலட்சுமியின் திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#varalakshmi #Varalakshmi sarathkumar #chasing #chasing movie #varalakshmi stunt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story