×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குவியும் எக்கச்சக்க பட வாய்ப்புகள்! புதிய தொழிலைத் தொடங்கிய நடிகை வனிதா! அதுவும் என்னன்னு பார்த்தீர்களா!!

குவியும் எக்கச்சக்க பட வாய்ப்புகள்! புதிய தொழிலைத் தொடங்கிய நடிகை வனிதா! அதுவும் என்னன்னு பார்த்தீர்களா!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றார். இதனால் அவர் சமூகவலைத்தளங்களில் பேசுப்பொருளானார்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்ததாக யூடியூப் சேனல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார். மேலும் தற்போது வனிதாவிற்கு தொடர்ந்து படவாய்ப்புகளும் குவிந்தவண்ணம் உள்ளது. வனிதா நடிகர் பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படம் போன்றவற்றை கைவசம் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் தற்போது புதிய தொழிலை தொடங்கியுள்ளார். அதாவது வனிதா விஜயகுமார் பெண்களுக்கான ஆடை, அலங்காரம், மேக்கப் போன்ற பொருட்களை உள்ளடக்கிய கடையை புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story