×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்போதும் என்னோட ஹீரோ இவர்தான்.. நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்துள்ளார். 
வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து, ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்தும் பெற்று பல விமர்சனங்களுக்கு உள்ளானார். 

 ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் வீடியோக்கள் என பிஸியாக உள்ளார். மேலும் அவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.  வனிதா தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். 

 இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துக் கூறி வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரலேகா படத்தில் விஜயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எப்பொழுதும் எனது ஹீரோ, சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story