ப்பா.. அவதார்க்கு அத்த பொண்ணு மாதிரி இருக்கு.. மிரட்டலாக வனிதா வெளியிட்ட புகைப்படம்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயின

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளாவார். சந்திரலேகா திரைப்படத்தை தொடர்ந்து வனிதா ஒரு சில திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.
பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது ஒருசில செயல்பாடுகளால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிகு பிறகு பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம், விவாகரத்து என அவர் பல சர்ச்சைகளில் சிக்கி இணையத்தில் பேசுப்பொருளானார்.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ளார்.
வனிதா தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். இந்த நிலையில் வனிதா அந்த நிகழ்ச்சிக்காக காளி வேடம் போட்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவதார்க்கு அத்தை பொண்ணு மாதிரி இருக்கு என கமெண்டு செய்து வருகின்றனர்.