×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா? வெளியான ஷாக் தகவல்!!

vanitha may be leave from bigboss house this week

Advertisement

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், வனிதா, சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர் .

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய freeze டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதன்படி நேற்றைக்கு முதல்நாள் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நேற்று தர்சன், வனிதா மற்றும் சேரன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று கவினின் நண்பர் மற்றும் சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை லாலா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தரவுள்ளனர்.  இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவின், வனிதா, தர்ஷன், ஷெரின் மற்றும் சாண்டி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.  அதனை தொடர்ந்து யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் வனிதாவே குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #elimination #vanitha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story