தெய்வமகள் வாணி போஜனுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
Vani bojan going to act in websries

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தெய்வமகள். இதில் சத்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரனான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.
தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியுள்ள இவர் நிதின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க உள்ளார்.இவர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்திலும் நடித்துவருகிறார்.
இதனை தொடர்ந்து வாணி போஜன் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.மேலும் அதில் பரத்தும் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.