நீங்க எதிர்பார்த்தைவிட சிறப்பான அப்டேட்! வலிமை வில்லன் நடிகர் வெளியிட்ட செம தகவல்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Valimai movie villan karthickeya tweet for ajitt fans
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதற்கிடையில் வலிமை படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் வலிமை பட வில்லன் கார்த்திகேயா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அவருக்கு சமூக வலைதள பக்கத்தில் அஜித் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிகுந்த அன்புடன் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகுது என கூறி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.