×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்பாடா.. ஒருவழியா வந்தாச்சு!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்! இதுதான் விஷயமா??

போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் தல அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. ஹெச். வினோத் இயக்

Advertisement

போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் தல அஜித்தின் 60வது திரைப்படம் வலிமை. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் ஆக்சன் கலந்த காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நீண்ட காலங்களாக வலிமை அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில் தல ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் பார்க்கும் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

இதனால் கோபப்பட்ட தல அஜித் கூட அவர்களை பொறுமையாக இருக்க கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முதன்முறையாக வலிமை குறித்த தகவலை படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதுக்குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Valimai #firstlook #birthday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story