×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூக்கு தண்டனைதான் கொடுக்கணும்.. தீயாய் பரவும் 'வாய்தா' பட டிரைலர்

தூக்கு தண்டனைதான் கொடுக்கணும்.. தீயாய் பரவும் 'வாய்தா' பட டிரைலர்

Advertisement

அறிமுக இயக்குனர் மகிவர்மன் சி.எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாய்தா’. இதில் கதாநாயகனாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் அறிமுகமாகியுள்ளார். மேலும் கதாநாயகியாக ஜெசிகா நடித்துள்ளார். 

மேலும் இப்படத்தில் நாசர், கே.டி என்கிற கருப்புதுறை பட புகழ் மு.ராமசாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது வாய்தா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வழக்கறிஞராக வரும் நாசரின் வசனங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் செம ரீச்சாகி உள்ளது. மேலும் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vaitha #trailer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story