தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தயாரிப்பாளர் போலீசில் புகார்! தலைமறைவாகிவிட்டாரா வடிவேலு? வெளியான பகீர் தகவல்!

Vadivelu talk about director sathishkumar complaint

Vadivelu talk about director sathishkumar complaint Advertisement

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகை  வடிவேலு. இவர் எந்த காலத்திலும் எவராலும் அழிக்க முடியாத மாபெரும் இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் சினிமா துறையிலிருந்து விலகி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் கமல்ஹாசனுடன், தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த  சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் வடிவேலின் உதவியாளர் மணிகண்டன் உட்பட 3 பேரின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எலி படத்தினால் எனக்கு 14 கோடி நஷ்டம் ஏற்பட்டது.  அதற்கு ஈடாக அவர் இரண்டு படங்களில் நடித்து தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் 2 பேருடன் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அவரது உறவினர்கள் சம்பள பாக்கி இருப்பதாக மிரட்டல் விடுகின்றனர் என கூறியுள்ளார். மேலும் வடிவேலுவும் தலைமறைவாக இருப்பதாகவும் வெளியானது.Vadivel

இந்நிலையில் இதனை வடிவேலு மறுத்துள்ளார். மேலும் தான் தலைமறைவாகவில்லை எனவும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு  சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னைக் களங்கபடுத்தவும் எனது எதிர்காலத்தை வீணாக்கவும் இப்படி குற்றம்சாட்டுகின்றனர் எனவும் வடிவேலு கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivel #sathishkumar #police complaint #complaint
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story