தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நம்ம தலைவன் வடிவேலுவா இது! கழுத்தில் டை, ஹேண்ட்சம் லுக்கில் அசத்துறாரே!! அரிய புகைப்படம் இதோ!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப

vadivelu-old-unseen-handsome-photo-viral Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென தற்போது வரை யாராலும் நிரப்பபமுடியாத ஒரு தக்க  இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு. அவரது உடல் பாவனைகளும்,காமெடியான டயலாக்கும் இன்றும் தமிழ் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கபடுகிறது.

இந்நிலையில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பின்னர் ஒரு சில காரணங்களால், பிரச்சினைகளால் நடிகர் வடிவேலுக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நண்பேண்டா என்ற வாட்ஸ்அப் குழுவினர் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்பொழுது அவர் தனக்கு பட வாய்ப்புகள் வராதது குறித்து வருத்ததுடன் தெரிவித்திருந்தார்.

Vadivelu

இதனை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது வடிவேலுவின் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் வடிவேலுவுக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளிக்கிறார். மேலும் அப்பொழுது வடிவேலு கழுத்தில் டை கட்டி செம ஹேண்ட்சமாக உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadivelu #handsome
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story