×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த வடிவேலு- பிரபுதேவா! ஏன்? என்ன காரணம் தெரியுமா??

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த வடிவேலு- பிரபுதேவா! ஏன்? என்ன காரணம் தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ஹீரோவாகவும் அவதாரமெடுத்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில பிரச்சினைகளால் படத்தில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு தற்போது மீண்டும் தடைகள் நீங்கி படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

அவர் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அவருடன் ஷிவாங்கி, டாக்டர் பட நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றுவதாக தகவல்கள் வெளிவந்தது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்று கோலகலமாக அந்த பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prabhudeva #Vadivelu #dance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story