×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேற லெவல்.. சார்பட்டா பரம்பரை படக்குழுவினருக்கு வாழ்த்துக் கூறிய உதயநிதி ஸ்டாலின்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970-களில் நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டை மையமாகக் கொண்டு  உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

இப்படத்தில் அந்த சமயத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, அதனை அப்போதைய காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்த காட்சிகளும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படக்குழுவினருக்கு வாழ்த்துக் கூறி  உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது. 

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார் ரங்கன் வாத்தியாராக பசுபதி, டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கேன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர், இயக்குனர் பா.இரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்  என குறிப்பிட்டுள்ளார் 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udhayanidhi stalin #Sapatta paramparai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story