×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#CineBreaking: அமீர்கானின் ஹிந்தி பட ரிலீஸ் ஏன்? - கூலாக சிரித்துக்கொண்டு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

#CineBreaking: அமீர்கானின் ஹிந்தி பட ரிலீஸ் ஏன்? - கூலாக சிரித்துக்கொண்டு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

Advertisement

அமீர்கானின் நடிப்பில், இயக்குனர் அட்வைட் சந்தன் இயக்கத்தில் உருவான திரைப்படம் லால் சிங் சத்தா. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் தமிழாக்கம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று சென்னையில் உள்ள சத்தியம் திரையரங்கில் நடிகர் அமீர்கான் - உதயநிதி ஸ்டாலின், லால் சிங் படக்குழு ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது, செய்தியாளர் திமுகவின் நிலைப்பாட்டை கூறி, ஹிந்தி பட ரிலீஸ்  தொடர்பாக கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஹிந்தி தெரியாது போடா என்பது ஹிந்தி திணிப்பிற்கு தான். மற்றபடி மற்றொரு மொழியை கற்றுக்கொள்ள நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை. உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம்.

அதை திணிப்பது தான் தவறு என்று நாங்கள் கூறுகிறோம். இதுதான் திமுகவின் கொள்கை. ரெட் செண்ட் மூவிஸ் சார்பில் பல தெலுங்கு படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. முதன்முதலாக ஹிந்தி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. அமீர் கானின் இந்த படத்தை பார்த்ததும் நான் அவருக்கு தொடர்பு கொண்டு பேசினேன். கட்டாயம் இந்த படத்தை தமிழ் மொழியில் நாம் ரிலீஸ் செய்வோம் என்று கூறினேன்.

இதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். நாங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். நான் ஹிந்தி மொழியை விட அமீர்கானின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகன். நான் அவரின் பல திரைப்படங்களை பார்த்து வியந்துள்ளேன். படத்தை தமிழில் வெளியிட ஒப்புக்கொண்டதற்கு அமீர்கான் மற்றும் படக் குழுவினருக்கு நன்றிகள். அமீர்கானுக்கும் திரைப்பட இயக்குனர் அவர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்" என்று பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#uthayanithi speech #amirkan hindi movie #hindi movie release #amirkan movie update
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story