×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடன்பிறப்பே.. நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு! கொண்டாடும் ரசிகர்கள்!!

உடன்பிறப்பே.. நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு! கொண்டாடும் ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளிவிட்டு இருந்த அவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த 50வது திரைப்படம் உடன்பிறப்பே. 

இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உடன்பிறப்பே படம் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி, விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.குடும்ப படமான  இந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udanpirappe #Deleted scene
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story