அஜித்தான் சூப்பர் ஸ்டார்.! அவரைத்தான் எனக்கு பிடிக்கும்! வெளிப்படையாக போட்டுடைத்த பிரபல நடிகை!!
trisha talk about ajiht
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. மேலும் அவர் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம் என கூறியுள்ளார்.
மேலும் இளைஞர்கள் சினிமாவை நிஜ வாழ்க்கையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது வெறும் கற்பனையே. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்டத்தை கொண்டு தண்டனை கொடுக்க வேண்டும், அரபு நாடுகளில் கொடுப்பது போன்று உடனடியாக கடுமையான தண்டனையை இங்கேயும் கொடுக்க வேண்டும்.
மேலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். நான் வெளிநாட்டில் இருந்ததால் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க முடியவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் அவர் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது. அவர் ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் திரிஷா கூறியுள்ளார்.