×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவரா.. ஆடுகளம் படத்தில் முதலில் நடித்த பிரபல டாப் நடிகை.! பாதியிலேயே விலக இதுதான் காரணமா??

இவரா.. ஆடுகளம் படத்தில் முதலில் நடித்த பிரபல டாப் நடிகை.! பாதியிலேயே விலக இதுதான் காரணமா??

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2011ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான இந்த படம் தனுஷ் கேரியரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சேவல் சண்டையை மையமாக கொண்டு உருவான இந்த படம் 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதை வென்றது.

இந்த திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக, ஹீரோயினாக டாப்ஸி நடித்திருந்தார். இது தமிழில் டாப்ஸிக்கு முதல் படமாகும். இப்படத்தில் ஐரின் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் டாப்ஸி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை திரிஷாவாம். 

ஆடுகளம் படத்தில் நடித்த திரிஷா ஒப்பந்தமான நிலையில் அவரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் பாதியிலேயே படத்திலிருந்து விலகியுள்ளார். அதன் பின்னரே டாப்ஸி ஆடுகளம் படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். இந்நிலையில் ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aadukalam #trisha #Vtv
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story