த்ரிஷா வெளியிட்ட அந்த 7 மணி அறிவிப்பு! எதிர்பார்பில் எகிறிய ரசிகர்களுக்கு த்ரிஷா கொடுத்த செம சர்ப்ரைஸ்... வைரலாகும் புதிய அப்டேட்.!!!
அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகை த்ரிஷா வெளியிட்ட அறிவிப்பு, வரலக்ஷ்மி சரத்குமாரின் புதிய பிக்கிள்பால் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்தது.
நடிகை த்ரிஷா அரசியலில் இணையப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதல்ல. விளையாட்டுத் துறையில் தொடங்கப்பட்டுள்ள புதிய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலானதாக அமைந்துள்ளது.
சமீப காலமாக தமிழக முதல்வர் விஜய் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் த்ரிஷா தொடர்ந்து காணப்பட்டதால், அவர் அரசியல் களத்தில் குதிக்கலாம் என்ற பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக, மாலை 7 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அவர் முன்கூட்டியே தெரிவித்திருந்ததால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இதையும் படிங்க: #அதிர்ச்சி செய்தி.... திருமாவளவனுக்கு முதல்வர் பதவி..... யாரும் எதிர்பாராத திருப்பம்! தமிழக அரசியலில் பரபரப்பு.!!!
அரசியல் அல்ல, விளையாட்டு அறிவிப்பு
ஆனால் வெளியான அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொடங்கியுள்ள புதிய பிக்கிள்பால் அணியான ‘சென்னை தமிழ் டைட்டன்ஸ்’ குறித்து த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
விளையாட்டுத் துறையில் புதிய முயற்சியாக களமிறங்கியுள்ள வரலக்ஷ்மி சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த த்ரிஷா, இந்த அணியின் பயணத்திற்கு தனது ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்த அறிவிப்பின் மூலம் தற்போது த்ரிஷா அரசியலில் இணைவதற்கான எந்தத் திட்டத்திலும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், தனது நண்பர்கள் மற்றும் சக கலைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்திருந்த சில ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், வரலக்ஷ்மி சரத்குமாரின் ‘சென்னை தமிழ் டைட்டன்ஸ்’ அணிக்கு த்ரிஷா தெரிவித்த ஆதரவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... அண்ணாமலையுடன் கைக்கோர்க்கப் போகும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!!