×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அன்றும், இன்றும், என்றும் ஒரேயொரு சூப்பர்ஸ்டார்.. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று..!

அன்றும், இன்றும், என்றும் ஒரேயொரு சூப்பர்ஸ்டார்.. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று..!

Advertisement

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயரை கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி 1950 ஆம் வருடம் பிறந்தார். இவரது குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வந்த போது, காவல் அதிகாரி ராமோஜி ராவ் ஹெய்க்வாட் - ஜிஜாபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அன்றைய நாட்களில் திரைத்துறைக்கு அறிமுகம் இல்லாத நடிகர் ரஜினிகாந்த், கர்நாடக போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றினார். 

அப்போதே ஸ்டைல் மன்னனாக விளங்கிய ரஜினிக்கு திரைவாய்ப்பு கிடைத்த நிலையில், அதனை சைரியாக உபயோகம் செய்து தனக்கென ரசிகர் கூட்டத்தினையே உருவாக்கிக்கொண்டார். இயக்குனர் பாலு மகேந்திரா, கே.பி, கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், போன்றோர் ரஜினிகாந்தை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். 

தனது இளமை காலத்தில் பல கஷ்டத்துடன் வளர்ந்து வந்த ரஜினி, திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக உயர்ந்தும் தனது குணத்தை மட்டும் மாற்றாமல் வைத்துள்ள காரணத்தால் தொடர்ந்து உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். தன்னால் இயன்ற உதவியை மறைமுகமாகவும் செய்து வருகிறார். 

ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களும் திரைத்துறைக்கு நன்கு பரிட்சயப்பட்டவர்களாக இருக்கிறார்கள். திரைத்துறையில் தவிர்க்க முடியதாக நாயகனாக விளங்கிய ரஜினிகாந்த், பல்வேறு வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை தன்னகத்தே தக்கவைத்துள்ளார். 

இவரின் கலைச்சேவை மற்றும் நடிப்புத்திறமையை பாராட்டி பல்வேறு விருதுகளும் வாங்கியுள்ளார். சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதனைத்தவிர்த்து, பத்ம விபூஷண், பத்ம பூஷன், கலைமாமணி, என்.டி.ஆர் தேசிய விருது, எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது, மராட்டிய மாநிலத்தின் ராஜ் கபூர் விருது, சிறந்த திரைப்பட நடிகர், சிறந்த எழுத்தாளர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இறுதியாக, அரசியலில் களமிறங்கும் முனைப்புடன் பல்வேறு வருடமாக இருந்து வந்த ரஜினிகாந்த், அதற்கான பணிகளை தீவிரமாக தொடங்கி பின்னாளில் அதனை கைவிடுவதாக அறிவித்தார். இன்று அவருக்கு பிறந்தநாள். பல்வேறு சர்ச்சைகள் அவருக்கு வெளிப்புறமாக நடந்து வந்தாலும், அவரின் குணம், ஆன்மீக ஈடுபாடு காரணமாக இன்றளவும் திரைத்துறையின் உச்சநட்சத்திரமாக இருந்து வருகிறார். அவர்தான் சூப்பர்ஸ்டார், தலைவர் ரஜினிகாந்த்.

உலகெங்கிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர். இவரின் படத்தை பார்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்லும் ரஜினியின் தீவிர பக்தர்கள் எல்லாம்  இருக்கிறார்கள். இன்றளவில் அரசியல் பிரச்சனை காரணமாக அவரை தமிழர் இல்லை கன்னடர் தமிழகத்தை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள், கர்நாடகாவில் அவர் கன்னடர் கிடையாது என்று கூறுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த 3 வருடத்திற்கு முன்னர் நடந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் சந்திப்பில், தன்னை பச்சை தமிழன் என்று கூறி ஆரவாரத்தை ஏற்படுத்தினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #cinema #tamilnadu #actor #HBD Rajinikanth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story