ஜி.பி முத்துவும், சூர்யாவும் சேர்ந்து சர்ச்சை பேச்சு..? அச்சத்தில் GP முத்துவின் மனைவி.. வைரல் வீடியோ..!
Tik tok fame gp muthu rowdy baby surya

முன்பெல்லாம் பிரபலம் ஆவது என்பது மிகவும் கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரே வீடியோவில் ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக டிக் டாக் செயலி மூலம் பலர் உலகம் முழுவதும் பிரபலமாகிவருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் செயலி மூலம் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. கோமாளி போல் ஏதாவது குறுக்குத்தனமாக வீடியோ செய்யும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.
இந்த ஜிபி முத்துவின் ஜோடியாக டிக்டாக்கில் கலாய்க்கப்படுபவர் தான் ரவுடி பேபி சூர்யா. இந்த இருவரும் சேர்ந்து பல டூயட் வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கின்றனர். அண்மையில் சூர்யா குறிப்பிட்ட ஜாதி குறித்து தவறாக பேசியதாக அவரது ஐடியை டிக் டாக் பிளாக் செய்தது.
இந்நிலையில் இருவரும் இணைந்து பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி என்னும் பெயரில் ரவுசு கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏதாவது நடக்குதுன்னா என் புருசனுக்கும் முன்னாடியே மாமாவுக்குத் தெரியும் என வரம்புமீறி அழிச்சாட்டியம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.