மக்களின் தாகம் தனித்த தேனி மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்; நீர், மோர், பழம் வழங்கி நெகிழ்ச்சி செயல்.!
மக்களின் தாகம் தனித்த தேனி மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்; நீர், மோர், பழம் வழங்கி நெகிழ்ச்சி செயல்.!
தமிழ்நாடு மட்டுமல்லாது பல இந்திய மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. மே 4 ம் தேதியான இன்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கி இருப்பதால், இன்று காலை 9 மணிக்கு மேலாகவே வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக உணர முடிந்தது.
நண்பகல் வேளைகளில் வெப்ப அலைகள் சாலையில் வீசிய காரணத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொலைதூர பயணங்களை இரயில் மற்றும் பேருந்து உதவியுடன் மேற்கொள்ளும் நபர்களும், ஜன்னலோரம் இதமான காற்று வாங்கிய நாட்களை நினைவுகூர்ந்து வெப்பமான சூழலை உணர்ந்து சென்றனர்.
இந்நிலையில், தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்.எஸ் பிரகாஷ் தலைசாமியில், தேவாரம், பல்லவராயன்பட்டி பகுதிகளில் நீர், மோர் பந்தல் தொடங்கப்பட்டு மக்களுக்கு தர்பூசணி உட்பட உடல் வெப்பத்தை குறைக்கும் பழங்கள் வழங்கப்பட்டன.