×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதிய கெட்டப்பில் கலக்கும் பிக்பாஸ் தர்ஷன்! வைரலாகும் புகைப்படம்!

Tharshan

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடலாவார். மேலும்  இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது காதலியுடன் ஏற்ப்பட்ட சர்ச்சையில் சிக்கினார். அதனை அடுத்து சமீபத்தில் சாண்டியின் ஸ்டுடியோ விழா ஒன்றில் கலந்து கொண்டார். சில பிக்பாஸ் பிரபலங்களுடன் ஷெரினும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது புது கெட்டப் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tharshan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story