×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூன்று மொழிகளில் தயாராகிறது நடிகர் யோகிபாபுவின் செம கலக்கல் திரைப்படம்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Tharmaprabhu movie translated in 3 language

Advertisement

கடந்த ஆண்டு தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தர்மபிரபு. இப்படத்தில் யோகிபாபு எமனாக நடித்திருப்பார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவரை பெருமளவில் ரசிக்க வைத்து வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்தது. மேலும் இப்படத்தில் எமனின் அப்பாவாக ராஜேந்திரபிரசாத் சித்திரகுப்தனாக கருணாகரன் மற்றும் சிவன் கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். 

முத்துக்குமாரன் இயக்கிய இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும்,  ஓடிடி தளத்திலும் வெளியிடப்படவுள்ளது. 

இதனைத் தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்நிலையில் தர்ம பிரபு படம் பிற மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெறும் என பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yogibabu #Thrmaprabhu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story