×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரமாண்டமாக நடக்கும் தர்பார் இசைவெளியீட்டு விழா! தொகுத்து வழக்கப்போவது இவரா? அவரே கூறிய தகவல்!

tharbar audio launch host by anger ramya

Advertisement

பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இதன் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா தற்போது டிசம்பர் 7ம் தேதியான இன்று  சென்னை நேரு உள்ளரங்கத்தில் மிகவும்  பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த பிரம்மாண்ட விழாவை தான் தொகுத்து வழங்க இருப்பதாக தொகுப்பாளினி ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tharbar #ramya #anger ramya
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story