×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென அமெரிக்கா செல்லும் நடிகர் தனுஷ்! ஏன் தெரியுமா? செம ஹேப்பியோடு வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் தி கிரே மேன் என்ற படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் தனுஷ் அமெரிக்கா செல்லவுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்ததாக ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் தனுஷ் கைவசம் தற்போது  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக உள்ளார். பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தனுஷ் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும்
Captain America, Avengers End Game இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகவுள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.  இந்நிலையில் தற்போது 'தி க்ரே மேன்' படப்பிடிப்பு அமெரிக்காவில் 2 மாதங்கள் நடைபெறவுள்ளது. இதற்காக தனுஷ் பிப்ரவரி 9  நாளை அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் எனவும், இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் தான் தனுஷ் தமிழகம் திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hollywood #thanush #America
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story