கயல் ஆனந்தியின் "பரியேறும் பெருமாள்" படத்திற்கு தணிக்கை குழு பாராட்டு!! படத்தில் அப்படி என்ன சிறப்பு?
thanikki kuluvin parattum parierum perummal

நடிகர் கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் இப்படம் வெளியாக உள்ளதால் தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படம் நன்றாக நன்றாக உள்ளதாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் பாராட்டியிருக்கிறார்கள். படத்தில் இரண்டு இடங்களில் மட்டும் மீயூட் செய்ய சொல்லி படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.