உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?
thamana-next-flim-act-with-uthayanithi
உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா இணைகிறார்!!!
உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.
இவர் ரெட் செயன்டு மூவிஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார். விஜய் , திரிசா நடித்த குருவியே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.
தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணே கலைமானே என்ற படத்தில் இணைகின்றார்.
இப்பொழுது நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் கத்திசண்டை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இது இவர்கள் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.