×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தளபதி 68 பூஜை எப்போது.? வெளியான அட்டகாசமான அப்டேட்.!

தளபதி 68 பூஜை எப்போது.? வெளியான அட்டகாசமான அப்டேட்.!

Advertisement

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில்  தற்போது போஸ்ட்  புரொடக்ஷன் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இரண்டாவது திரைப்படம் ஆகும்.

இதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாக இணையாய் இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதன் மூலம் விஜய் திரைப்படத்திற்கு முதல் முதலாக யுவன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து படத்தைப் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவமிருந்தனர். இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தைப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த திரைப்படத்தின் பூஜை வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய், அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக அமெரிக்கா சென்று ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து வந்ததாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பா விஜய்க்கு கதாநாயகியாக சிம்ரனும் மகன் விஜய்க்கு கதாநாயகியாக பிரியா மோகனும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #venkat prabhu #Yuvan #Kollywood #Thalapathy 68
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story