×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது ரெஸ்ட் டைம்... துபாய்க்கு கிளம்பிய தளபதி விஜய்... வைரல் வீடியோ.!

இது ரெஸ்ட் டைம்... துபாய்க்கு கிளம்பிய தளபதி விஜய்... வைரல் வீடியோ.!

Advertisement

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக இருப்பவர் தளபதி விஜய். இவர் அரசியலுக்கு வர இருப்பதாக  பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியலுக்கு வருவது போன்றே இவரது சமீப கால நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

தளபதி விஜயின் 67 வது படமான லியோ  திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன்  திரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத், மன்சூர் அலி கான்  இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும்  மிஸ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து இருக்கின்றன.

லியோ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காக தளபதி விஜய்  துபாய் சென்று இருக்கிறார். இவர் சென்னை ஏர்போட்டில் இருந்து துபாய் செல்லும்  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. துபாயில் இருந்து வந்த பின் வெங்கட் பிரபுவின்  திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kollyood #tamil cinema #thalapathy vijay #Leo #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story