×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒருவழியாக நிதி வழங்கினார் விஜய்.! பிரதமர் உட்பட 6 மாநிலங்களுக்கு நிவாரண நிதி.! மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

Thalapathy Vijay donates Rs 1.3 crore to coronavirus relief efforts

Advertisement

கொரோனா தடுப்பு நிதியாக பல்வேறு பிரபலங்கள் நிதி வழங்கிவரும் நிலையில், கொரோனா தடுப்பு நிதியாக 1.30 கோடி ரூபாய் கொடுத்து அசத்தியுள்ளார் தளபதி விஜய்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை தடுக்க அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை தடுக்கும் விதமாக வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவை தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு உதவி செய்யவும் பிரதமர் மற்றும் மாநில முதலைவர்களின் நிவாரண நிதிக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சாதாரண மக்கள் என பலரும் நிவாரணநிதி வழங்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவர் ரஜினி, அஜித், ராகவா லாரன்ஸ் போன்ற பலவேறு நடிகர்கள் நிதி வழங்கியும், முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் எந்த ஒரு நிதியும் வழங்காமல் இருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், 1.30 கோடி நிதியாக அறிவித்து அசத்தியுள்ளார் விஜய்.

பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம், தமிழக அரசு நிவாரண நிதிக்கு 50 லட்சம், கேரள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்காக தலா 5 லட்சம் என மொத்தம் 1.30 கோடி நிதியாக நடிகர் விஜய் வழங்கியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Corono fund
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story