×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! தளபதி 68 பட மாஸ் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்.!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! தளபதி 68 பட மாஸ் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த லியோ திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 68ன் சூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்து தெரிவித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த ஆண்டு உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தளபதி 68 அப்டேட்: நேற்று தாய்லாந்தில் மிகப்பெரும் சண்டைக்காட்சியின் சூட்டிங் நடைபெற்றது. நேற்று இரவு முழுவதும் சூட்டிங் நடைபெற்றதால், இன்று இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalapathi 68 #venkat prabhu #Archana kalpathi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story